நாகையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி


நாகையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2020 3:55 AM GMT (Updated: 27 Dec 2020 3:55 AM GMT)

நாகையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினம்,

தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். குறிப்பாக நாகை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலைகள் தாக்கியதின் 16-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அஞ்சலி

இதையொட்டி நாகை மாவட்டத்தில் நாகை நம்பியார்நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் இறந்தவா்களுக்கு உறவினா்கள் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலோர பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்குதளம் வெறிச்சோடி காணப்பட்டது.

மவுன ஊர்வலம்

நாகையை அடுத்த கீச்சாங்குப்பத்தில் நினைவு தூண் முன்பு பொதுமக்கள் சார்பில் ஆத்மசாந்தி யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் ் நினைவு தூணில் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ- மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது.

பின்னர் பள்ளியில், சுனாமியில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் டாடா நகர் சுனாமி குடியிருப்பில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள நினைவு தூணில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகை நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் சமுதாயக் கூடத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் மக்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவா்கள் ஊா்வலமாக கடற்கரைக்கு வந்து அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது, மீனவ பெண்கள் உறவினர்களை பறிகொடுத்த சோகத்தில் கடலைப் பார்த்து கதறி அழுதனா்.

ேவளாங்கண்ணி

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் அமைச்சா் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோர் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ேவளாங்கண்ணியில் உள்ள நிைனவு ஸ்தூபியில ெபாதுமக்கள் அஞ்சலி ெசலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் கடற்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து ஸ்தூபியில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஜூலியட்அற்புதராஜ், மற்றும் பலர் அஞ்சலி ெசலுத்தினா்.

கடலில் பாைல ஊற்றினா்

ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி ெசலுத்தினா். அப்ேபாது பெண்கள் கடலை பாா்த்து கதறி அழுதனர்.பின்னா் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய கிராமங்களில் மவுன ஊா்வலம் நடந்தது. இதில் கலந்து ெகாண்டவா்கள் கருப்பு ேபட்ஜ் அணிந்து ெகாண்டு ஊா்வலமாக வந்து கடற்கரையை அடைந்தனா். அங்கு புதைக்கப்பட்ட தங்களது உறவினர்களின் நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதே போல் வெள்ளப்பள்ளத்தில் சுனாமி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி பேரலை தாக்கி 16 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் அந்த சுவடுகள் மாறாத நிலையில் மீனவர்கள் நீங்கா நினைவுகளுடன் உறவினா்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர்.

Next Story