பல்லடத்தில் 21 பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உழைக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க காசோலை வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பொங்கலூர்,
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உழைக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க காசோலை வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் 21 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க காசோலைகளை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் சித்துராஜ், கூட்டுறவு சங்கத்தலைவர் சொக்கப்பன் மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ், பல்லடம் நகர செயலாளர் கல்லம்பாளையம் ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ராதேவி, ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோகுல், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 50 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Related Tags :
Next Story