தலா ரூ.2500, பொங்கல் பரிசு தொகுப்பு: 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுவீடாக டோக்கன் வினியோகம் தீவிரம்


தலா ரூ.2500, பொங்கல் பரிசு தொகுப்பு: 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுவீடாக டோக்கன் வினியோகம் தீவிரம்
x
தினத்தந்தி 27 Dec 2020 7:07 PM IST (Updated: 27 Dec 2020 7:07 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.2500 பெறும் 10 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை,

வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுகரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி கோவை மாநகரில் சுங்கம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் என மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று காலை முதல் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து கோவை வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 47 ஆயிரம் ரேஷன்கார் டுகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 9 ஆயிரம் பேர் அரிசி ரேஷன்கார்டுகள் வைத்து உள்ளனர். அவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுடன் தலா ரூ.2,500 வழங்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த டோக்கனில் ரேஷன்கர்டுதாரர் எந்த தேதியில் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வருகிற 4-ந் தேதி முதல் காலை 100 பேருக்கும், மதியத்திற்கு பிறகு 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். கொரோனா அச்சம் காரணமாக வீட்டிற்கு ஒருவர் மட்டுமே பொங்கல் பரிசு வாங்க வர வேண்டும்.

வருகிற 12-ந் தேதி வரை பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கடைகளி லும் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், டோக்கன் கிடைக்காதவர்கள் என விடுபட்டவர்கள் 13-ந் தேதி பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story