அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (பயிற்சி) அரசு செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்சஹாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் வேளாண் துறையில் வேளாண் உற்பத்தி விவரங்கள், தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், வேளாண் பொறியியல் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் கிராம ஊராட்சிகளில் தெருவிளக்குகள் 100 சதவீதம் எரிவது குறித்தும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் விவரங்கள், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்ட விவரம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், அணைக்கட்டு, தடுப்பணை விவரங்கள், மின்சாரத்துறையின் செயல்பாடுகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், ஆவின் நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி உள்பட அனைத்துத்துறைகளிலும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சஹாய் மீனா, விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். முன்னதாக அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், சப்-கலெக்டர் அனு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story