புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகளவு மக்கள் கூட இருப்பதால் புதுச்சேரியில் ஜன.3 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகளவு மக்கள் கூட இருப்பதால் புதுச்சேரியில் ஜன.3 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டின் அனைத்து பண்டிகைகளும், அரசு விதித்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே கொண்டாடப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில், கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாடலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் கடற்கரை சாலையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாடலாம் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகளவு மக்கள் கூட இருப்பதால் புதுச்சேரியில் ஜன.3 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி நகரப்பகுதியில் கனரக வாகனங்களை இயக்க தடை செய்யப்படுவதாகவும் புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story