செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை


செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2020 2:41 AM IST (Updated: 28 Dec 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஊனை ரங்காநாதன், ரத்னமங்கலம் விஜயகுமார், மண்ணிவாக்கம் சண்முகம், ஒட்டேரி டி.குணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் வேங்கடமங்கலம் கிராமத்தில் இலவச பட்டா வழங்கப்படவில்லை, தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம் என்று தங்களது குறைகளை நேரடியாக எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். இதற்கு எம்.எல்.ஏ. மிக விரைவில் திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் வேலுமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நல்லம்பாக்கம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதனூர் கிளை செயலாளர் டி.தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்விழி தமிழ்அமுதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஆதனூர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் குளக்கரை அருகே நடந்த கூட்டத்தில் வரலட்சுமி மதுசூதன் எம்.எல்.ஏ., சேப்பாக்கம் பிரபாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதில் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி தி.மு.க. செயலாளர் ராஜன், ரத்திஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story