சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 2:56 AM IST (Updated: 28 Dec 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் சரவண பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 34). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் காரில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் வசிக்கும் தனது அக்காள் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

திருநின்றவூரை அடுத்த பக்கம் செக்போஸ்ட் அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் உள்ள என்ஜினில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாத், உடனடியாக சாலையோரமாக காரை நிறுத்தினார்.

காரில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழே இறங்கிவிட்டார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கார ்முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆவடியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கி விட்டதால் பிரசாத் உள்பட அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

Next Story