கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு விடப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம் - கோயம்பள்ளி இடையே சுமார் ரூ.14 கோடி மதிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு பாலப்பணிகள் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் இரு கரைகளில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், விளை பொருட்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்றில் பெரும்பாலான காலங்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கும். ஆனால் மழை காலம் மற்றும் வெள்ள காலங்களில் அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் செல்வதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த பாதையை கடந்து செல்வதற்கு வேறு வழி இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு இந்த பாலத்தை கட்டுவதற்கான ஏற்பாடுகளை தொடங்கி பணிகளை முடித்து இருந்தபோதும், இணைப்புச் சாலை அமைப்பதற்கு கடந்த 5 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோரிக்கை
இது தொடர்பாக இரு கரைகளை சேர்ந்த மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி பகுதிவாழ் மக்கள் அரசுத் துறைக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீர் இரு கரைகளையும் தொட்டு செல்லும் அளவுக்கு தண்ணீ்ர் செல்வதால் மேலப்பாளையம் பொது மக்கள் இப்போது 16 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு கரூர் நகருக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கரூரில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது 16 கிலோமீட்டர் சுற்றித் தான் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு பணிகள் நிமித்தமாக கரூரில் டெக்ஸ்டைல், பஸ் பாடி மற்றும் கொசுவலை தொழில் பணிகளுக்காக செல்லும் தொழிலாளர்கள் நாள்தோறும் சுற்றி வருவதால் அவர்களுக்கு பண விரயமும் மற்றும் கால விரயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பாலத்தின் இரு கரைகளிலும் இணைப்புச் சாலை அமைத்து பாலத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story