தஞ்சை மாவட்டம் நியமம் கிராமத்தில் 8 அடி உயர லிங்கம் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுப்பு


தஞ்சை மாவட்டம் நியமம் கிராமத்தில் 8 அடி உயர லிங்கம் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 6:55 AM IST (Updated: 28 Dec 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் நியமம் கி்ராமத்தில் 8 அடி உயர லிங்கம் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் அங்கு கீழடி போன்று அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா நியமம் என்ற கிராமத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் ரவி மாணவர்களுடன் ஆய்வு நடத்தி உள்ளார். இந்த ஆய்வின்போது 8 அடி உயர லிங்கம் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக ரவி நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பேரரசர் பெரும்பிடுகு என்ற முத்தரையர் இன சுவரன் மாறன் மன்னர் கி.பி. 710 முதல் 776 வரை நியமத்தை தலைநகராக கொண்டு ஆட்சி ெசய்து உள்ளார். 1008 சிவலிங்கங்களுடன் கூடிய கோவில்களையும் கட்டி உள்ளார். அவர் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக கோட்டைசுவர், அகழி போன்றவை நாங்கள் நடத்தியமேற்பரப்பு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

கீழடி போன்று அகழாய்வு

மேலும் அந்த பகுதியில் இருந்து பிடாரி அம்மன் சிலை மற்றும் உடைந்த நிலையில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான சிலைகள், கல்வெட்டுக்கள் கிடைத்து உள்ளன. மாலிக்கபூர் படையெடுப்பின்போது இங்கிருந்த கோவில்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம்.

எனவே இந்த பகுதியில் கீழடியை போன்று மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் பண்டைய தமிழ் அரசனின் வீரவரலாறு மற்றும் சிறந்த வணிக நகரான நியமத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கை முறையை இக்கால மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனது ஆய்வின் போது கண்டெக்கப்பட்ட சிலைகள் மற்றும் கல்வெட்டுக்களின் புகைப்படங்களையும் அப்போது ரவி வெளியிட்டார்.

Next Story