திருச்சியில் 3-ம் கட்ட பிரசாரம்: நாங்கள் அமைக்கும் ஆட்சியில் மக்கள் கணக்கு கேட்கலாம் கமல்ஹாசன் பேச்சு


திருச்சியில் 3-ம் கட்ட பிரசாரம்: நாங்கள் அமைக்கும் ஆட்சியில் மக்கள் கணக்கு கேட்கலாம் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2020 7:24 AM IST (Updated: 28 Dec 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் அமைக்கும் ஆட்சியில் மக்கள் கணக்கு கேட்கலாம் என்று திருச்சியில் 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் பேசினார்.

திருச்சி,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் நேற்று தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தனியார் ஓட்டலில் நடந்த சிறு குறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

தமிழகத்தை மாற்றி அமைக்கும் ேவலையை நான் மட்டும் செய்து விட முடியாது. அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். நீங்கள் அசட்டையாக இருந்தால் கொள்ளை நடந்து கொண்ேட தான் இருக்கும். ஆட்சியாளர்கள் கொள்ளையில் துளிர்த்து போய்விட்டார்கள். அவர் (எம்.ஜி.ஆர்.) இப்படி துளிர்க்கவேண்டும் என்பதற்காக இலையை வைக்கவில்லை.

சிறப்பான திட்டங்கள்

தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்த மக்கள் நீதி மய்யம் சிறப்பான திட்டங்களை வைத்து இருக்கிறது. நாங்கள் யாருக்கும் காசு கொடுப்பது இல்லை. ஆனாலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது. மக்கள் விரும்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எல்லோரது மனதிலும் தோன்றி விட்டது. இனி அதனை செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி. ேதர்தலை எவ்வளவு தள்ளி போட்டாலும் சரி, முன்னாடி கொண்டு வந்தாலும் சரி நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

கனவு அல்ல திட்டம்

மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்ற பட்டியலை நாங்கள் தயாரித்து வைத்து இருக்கிறோம். தமிழகத்தை ஒரு டிரிலியன் எக்கானமி மாநிலமாக மாற்றவேண்டும் என்பது கனவு அல்ல. எங்கள் திட்டம். இப்போது இருப்பதை விட 4 மடங்கு வளர்ச்சி அடைய நேர்மையான ஆட்சி அமைப்போம்.

ஒற்றை சாளர முறையில் காகிதம் இல்லாத (பேப்பர் லெஸ்) திறந்தவெளி டெண்டர் விடுவோம். சிறு நகரங்களில் தொழில் அபிவிருத்தி செய்து பொருளாதாரத்தை ேமம்படுத்துவோம். சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம்.

குப்பையில் இருந்து மின்சாரம்

மூலப்பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.தொழிற்பேட்டைகளை சிறு நகரங்களில் கூட அமைப்போம். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வர்த்தக மையங்களை அமைப்போம். உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களை கொண்டு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுப்போம்.

நீங்கள் எல்லோரும் எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்பதற்காக நான் இ்ங்கு வரவில்லை. இது எல்லோரும் சேர்ந்து இழுக்கவேண்டிய தேர். அதில் உங்கள் கையும் இருக்கவேண்டும் என்ற கடமையை நினைவு படுத்தவே வந்து உள்ளேன்.

கணக்கு கேட்கலாம்

தமிழகத்திற்கு தேவை ஒரு நேர்மையான அரசு அதனை எங்களால் தான் அமைக்க முடியும். நாங்கள் அமைக்கும் ஆட்சியில் சி.பி.ஐ. சோதனை நடத்த தேவை இல்லை. மக்களே கணக்கு கேட்கலாம்.

நாங்கள் பதில்சொல்வோம். தமிழகத்தை சீரமைக்கவேண்டு்ம் என்பது வரலாறு நமது அனைவருக்கும் கொடுத்திருக்கும் வாய்ப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story