ஏரல் அருகே பயங்கரம் லாரி டிரைவர் அடித்துக் கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஏரல் அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஞானையா. இவருடைய மகன் செல்வகுமார் என்ற செல்லகுட்டி (வயது 40). லாரி டிரைவர். இவருடைய மனைவி ரூத் சாந்தா. இவர்களுக்கு ஜேம்ஸ் (10) என்ற மகனும், ஜெனிபா (7) என்ற மகளும் உள்ளனர்.
செல்வகுமார் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியின் ஊரான ஏரலில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இருந்தபோதிலும் செல்வகுமார் அடிக்கடி தனது சொந்த ஊரான பண்டாரவிளைக்கு சென்று வருவது வழக்கம்.
அடித்துக்கொலை
நேற்று காலையில் செல்வகுமார் பண்டாரவிளைக்கு தனியாக சென்றார். மாலையில் அங்குள்ள அய்யனார்குட்டி கோவில் அருகில் உள்ள பனங்காட்டு பகுதியில் செல்வகுமார் உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் இருந்தது. அவரது உடலின் மீது உருட்டுக்கட்டையும், அருகில் சீட்டு கட்டுகளும் சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட செல்வகுமாருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே அடிதடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. மேலும் செல்வகுமார் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த ஊரில் உள்ள தன்னுடைய குடும்பத்தினரிடமும் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.
கொலையாளிகளுக்கு வலைவீச்சு
எனவே முன்விரோதம் காரணமாக செல்வகுமாரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்தனரா? அல்லது சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவான கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். ஏரல் அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story