மாற்று வழியில் சாலை அமைக்க கோரிக்கை இரையுமன்துறையில் ஐகோர்ட்டு அமைத்த குழு ஆய்வு


மாற்று வழியில் சாலை அமைக்க கோரிக்கை இரையுமன்துறையில் ஐகோர்ட்டு அமைத்த குழு ஆய்வு
x
தினத்தந்தி 28 Dec 2020 9:44 AM IST (Updated: 28 Dec 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

இரையுமன்துறையில் மாற்று வழியில் சாலை அமைக்க மீனவர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஐகோர்ட்டு அமைத்த குழு ஆய்வு செய்தது. அப்போது தூண்டில் வளைவு அமைக்கவும் மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் இரையுமன்துறை மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதி வழியாக சாலை ஒன்று இரையுமன்துறை மீன் பிடி துறைமுகம் வரை செல்கிறது. இந்த சாலை வழியாக மீன் ஏற்றுமதி செய்ய கனரக வாகனங்கள் சென்று வருவதால், சாலையின் இருபுறங்களிலும் உள்ள வீடுகள் அனைத்தும் சேதமடைந்து, வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது.

இதனை தடுத்து மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரையுமன்துறை மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் கூறினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஐகோர்ட்டில் மனு

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மீனவர்கள் எதிர்த்த பகுதியில் பொதுப்பணித்துறையினர் காங்கிரீட் தளம் அமைத்து சாலையை மேம்படுத்தினர். சாலை மேம்படுத்தபட்டதை தொடர்ந்து மீண்டும் கனரக வாகனங்கள் அந்த சாலை வழியாக இயங்க தொடங்கின.

இதை எதிர்த்து இரையுமன்துறை மீனவ கிராம மக்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ரிகள் உடன் இருந்தனர்.

காலை 10 மணியளவில் வந்த குழு மதியம் 2 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலையில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் வீடுகள் இடிந்த நிலையில் உள்ளது குறித்து மீனவ மக்கள் விசாரணைக்குழு அதிகாரியிடம் மனுக்கள் அளித்தனர்.

சலசலப்பு

விசாரணைக்குழுவினர் இரையுமன்துறை துறைமுக மீன்பிடி இறங்குதளம் பகுதியில் விசாரணை மேற்கொண்டிருந்த போது கடலில் சென்று மீன்பிடித்து வரும் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், மீன் ஏல வியாபாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சலசலப்பில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து அனுமதிக்கபட்ட மீனவர்கள், தனிநபர் அதிகாரியிடம் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சாலையால் எந்த வித பயனும் இல்லை. இதனால் இருபுறங்களிலும் உள்ள வீடுகளுக்கு தான் பேராபத்து என்றும், எனவே இந்த சாலைக்கு பதிலாக மாற்று சாலை ஏற்பாடு செய்து மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். இரையுமன்துறை மீன்பிடி இறங்கு தளத்தில் மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

பக்க சுவர்

இரையுமன்துறை மீனவ கிராம பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்று கரையையொட்டி படகுகள் நிறுத்தபடுவதாலும், படகுகள் கடலில் இருந்து கரைக்கும், கரையில் இருந்து கடலுக்கும் செல்லும் போது ஏற்படும் அலையால் கரைபகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அனைத்தும் சேதமடைந்து வருவதாகவும், அதை தடுக்க பக்கசுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளை மாற்றி படகுகள் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மீனவர்கள் விசாரணை குழுவிடம் வைத்தனர். மீனவர்களின் கருத்துகளை கேட்டறிந்த விசாரணை குழுவினர் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிக்கு சென்றும் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.

Next Story