குமரிக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை 550 பேரிடம் கோரிக்கை மனுவை பெற்றனர்
குமரிக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வந்தனர். அவர்களிடம் 550 பேர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
நாகர்கோவில்,
தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, இளங்கோவன் ஆகியோர் தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, அதனை தேர்தல் அறிக்கையாக தயார் செய்யவும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து அறிய டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
550 மனு
இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் சங்கத்தினர், பொதுநல சங்கத்தினர் உள்பட பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 550 பேர் கோரிக்கை மனுக்களை, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகத்தின் வசதிக்காக 65 மாவட்டங்கள் உள்ளன. இதில் 80 சதவீத மாவட்டங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று உள்ளோம். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் தலைமை கழகத்தில் கொடுக்கப்படும். எம்.ஜி.ஆர். பெயரை தற்போது பலரும் பயன்படுத்துவது தவறு இல்லை. அவர் ஒரு பொதுமனிதர்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலாக தயாரித்து கவர்னரிடம் தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோர்ட்டை நாடுவோம். தி.மு.க. மீது கமல்ஹாசன் கூறும் குற்றச்சாட்டுகளை தெளிவாக பேச வேண்டும். அதற்கு நாங்கள் பதில் அளிப்போம். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நியாயமாக நடக்கும் என நம்புகிறோம். பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் எங்களை பற்றி தவறாக பேசி இருக்கமாட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அரசியல் சூழ்நிலைகளை எப்படி என்பதை கூறமுடியும்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.
திருச்சி சிவா எம்.பி.
முன்னதாக கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறோம். பலதரப்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை ஆராய்ந்து அதில் உள்ள குறைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அந்த கோரிக்கைகளை தலைமை கழகத்திடம் ஒப்படைப்போம். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோருக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் எம்.பி., ஆஸ்டின் எம்.எல்.ஏ., அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், பேராசியர் டி.சி.மகேஷ், கன்னியாகுமரி நகர செயலாளர் குமரிஸ்டீபன், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இரா.பெர்னார்டு, எப்.எம்.ராஜரெத்தினம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் புவியூர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story