ஆற்றில் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே அடித்துக்கொன்று ஆற்றில் புதைத்தது அம்பலம்
கல்லணை அருகே ஆற்றில் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கணவரே அவரை அடித்துக்கொன்று ஆற்றில் புதைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொன்றதாக கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள சுக்காம்பார் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணலில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பிணமாக கிடந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அந்த பெண்ணின் உடலை டாக்டர்கள் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து அந்த இடத்திலேயே அடக்கம் செய்தனர்.
கணவரே கொன்று புதைப்பு
பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்?. எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கோவிலடி கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் என்பவரை கும்பகோணத்தை சேர்ந்த முரளி(வயது 36) என்பவர் தொடர்பு கொண்டு சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றில் புதைக்கப்பட்ட உடல் தனது மனைவியின் உடல் என்றும், மனைவியை கொன்று தான் அங்கு புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், முரளியை தோகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் தீபநாதன் மற்றும் போலீசார் முரளியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முரளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நடத்தையில் சந்தேகம்
எனக்கும், ரம்யாவுக்கும்(பிணமாக கிடந்த பெண்) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறேன். எனது மனைவியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எங்கள் இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம் 6-ந்தேதி வழக்கம்போல் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ரம்யாவின் தலையில் தாக்கினேன். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை வீட்டில் உள்ள குளியலறையில் வைத்து இருந்தேன்.
கைது
பின்னர் இரவில் எனது மனைவியின் உடலை காரின் பின்புறத்தில் போர்வையால் சுத்தி நைலான் கயிறால் கட்டி எடுத்துக்கொண்டு சுக்காம்பார் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணலை ேதாண்டி புதைத்து விட்டு சென்று விட்டேன். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த தகவலை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார்.
இதுகுறித்து தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Tags :
Next Story