ஈரோடு மாநகர் பகுதியில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்


ஈரோடு மாநகர் பகுதியில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்
x
தினத்தந்தி 28 Dec 2020 11:04 AM IST (Updated: 28 Dec 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு சூளை மற்றும் வீரப்பன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் புதிதாக அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பெரியவலசு அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தில் ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 6 புதிய வகுப்பறைகளையும், ராஜாஜிபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய ரேஷன் கடையையும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தாசில்தார் பரிமளாதேவி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் ஜெகதீஷ், தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், மாநகர பிரதிநிதி ஆஜம், ஆவின் துணைத்தலைவர் குணசேகரன், அரசு வக்கீல் துரை சக்திவேல், அக்ரஹாரம் பகுதி தோல் பதனிடும் ஆலை சங்க தலைவர் கருப்பணன், முன்னாள் கவுன்சிலர் காவிரி முருகன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story