சிப்காட் வருவதை எதிர்க்க விவசாய நிலங்களை விற்பனை செய்யக்கூடாது ஆலோசனை கூட்டத்தில் முடிவு
சேவூர் அருகே சிப்காட் வருவதை எதிர்க்க விவசாய நிலங்களை விற்பனை செய்யக்கூடாது என்று பொதுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேவூர்,
அவினாசி ஒன்றியம் தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சிகளில் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி முழுவதும் விவசாயமும் கால்நடை வளர்ப்புமே பிரதான தொழிலாக உள்ளது.
இந்த 3 ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சிப்காட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்கிற அமைப்பை ஏற்படுத்தினர்.
இந்த இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் அடி பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி.பாலு, மாவட்ட செயலாளர் லோகநாதன், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், கிராமிய மக்கள் இயக்க தலைவர் தொரவலூர் சம்பத், அத்திக்கடவு - அவினாசி திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், டேலன்ட் பழனிச்சாமி, களம் அமைப்பாளர் சதீஸ், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டம்
இந்த கூட்டத்தில் சிப்காட் வருவதை தடுக்க வேண்டும் என்றால் விவசாய நிலத்தை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. அடுத்தகட்ட போராட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
பொதுக்கூட்டத்தின் போது, வேண்டாம் வேண்டாம் சிப்காட் வேண்டாம், வாழவிடு, வாழவிடு நிம்மதியாக வாழ விடு, என ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். தொடர்ந்து அனைத்து வாகனத்திற்கும் சிப்காட் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பின்னர் தொழில் பூங்கா வேண்டாம் என்று ஒரு லட்சம் நபர்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story