வெள்ளமடை ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்: மக்களின் தேவை அறிந்து திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்துகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
மக்களின் தேவை அறிந்து திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்துகிறார் என்று வெள்ளமடை ஊராட்சியில் அம்மா மினிகிளினிக் கை திறந்து வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சரவணம்பட்டி,
கோவை புறநகர் வடக்கு மாவட்டம் எஸ்.எஸ்.குளம் கிழக்கு ஒன்றியம் வெள்ளமடை ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., கவுண்டம்பாளையம் தொகுதி வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் அபிநயா ஆறுக்குட்டி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகசுந்தரம், வெள்ளமடை ஊராட்சி தலைவர் பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர்
இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி யும், மருத்துவ சேவையை குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி யாருடைய வாரிசாகவும் முதல் -அமைச்சராக வரவில்லை. நம்மை போன்ற கிராமத்தில் இருந்து ஒவ்வொரு பொறுப் பாக பெற்று இன்றைக்கு முதல்- அமைச்சராக வந்து இருக்கிறார். அவர், அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடுபவர் அல்ல.
ஏழை எளிய மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்துகிறார். இந்த ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கோவை மாவட்டத்தில் தான் அதிக வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தை 10 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சுரேஷ்குமார், அன்னூர் தாசில்தார் சந்திரா, வட்டார வளர்ச்சி அதிகாரி லதா, அத்திபாளையம் ஊராட்சி தலைவர் சுபத்ரா புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, வெள்ளமடை ஊராட்சி கவுன்சிலர்கள் மகேஸ்வரி, சிவகாமி, பிருந்தா, தனலட்சுமி, ரேவதி, சந்திரசேகர், கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில் என்ற கார்த்திகேயன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர்கள் ஜி.சுப்ரமணியம், சுகுமார், நிர்வாகிகள் கே.எஸ்.கிருஷ்ணசாமி, புருஷோத்தமன், சண்முகசுந்தரம், கோட்டை கவுரிசங்கர், பாலு, ரங்கசாமி, அருள்குமார், கதிரவன், ஆறுமுகம், பாலசுந்தரம், தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மகேந்திரன், வைஷ்ணவி, வேல்முருகன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story