காவேரிப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது
காவேரிப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்,
காவேரிப்பாக்கம் அருகே தர்மநீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இருந்த கியாஸ் சிலிண்டரை 2 நாட்களுக்கு முன்பு 2 பேர் திருடி சென்றனர். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றதில் ஒருவர் பிடிப்பட்டார். மற்றொருவர் தப்பித்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் பிரேமா (37) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் கியாஸ் சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டவர்கள் எலத்தூர் ரோட்டுத் தெருவைச் சேர்ந்த மதன் (27), மாரி (24), என தெரியவந்தது.மேலும் தர்மநீதி ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 3 சிலிண்டர்களை திருடிவிட்டு 4-வது சிலிண்டரை திருடி வெளியே வரும் போது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதேபோல் பாணாவரம், அரக்கோணம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கியாஸ் சிலிண்டர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 10 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்து மதன், மாரி, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story