அரசுத்துறைகளில் காலியாக உள்ள 1½ லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. மாநில கவுரவ தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார்.
வேலூர்,
மாநில பொதுச்செயலாளர் தொல்காப்பியன், பொருளாளர் ஜோதிராமலிங்கம், வேலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் பாலாஜிசிங் வரவேற்றார். இதில், சங்க மாநில ஆலோசகர்கள் செல்வமணி, மணி, அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, பதவி உயர்வு, மருத்துவப்படி உள்ளிட்டவை வழங்க வேண்டும். தமிழக அரசுத்துறைகளில் காலியாக காணப்படும் 1½ லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் துறைவாரியாக அலுவலகங்களை உருவாக்கி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சேலம், நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில நிர்வாகி ஜெயபால் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story