தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
சேலம் அருகே மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
சேலம்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட சேலம் வடக்கு ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசும்போது, தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுகிற அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் எவ்வித திட்டமும் செயல்படுத்தவில்லை. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தி.மு.க. ஆட்சியில் ரூ.10 ஆயிரம் சுழல்நிதியும், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் உதவியும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது செயல்படுத்தவில்லை. எனவே வருகிறசட்டமன்ற தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, தொகுதி பொறுப்பாளர் ரத்னவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சங்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி சங்கரன், மல்லமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி விஜயன், ஊராட்சி அவைத்தலைவர் தண்டாயுதம், மாவட்ட பிரதிநிதி விஜயன், கார்த்திக், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story