பெருங்களத்தூரில் பணம் வைத்து சூதாடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது


பெருங்களத்தூரில் பணம் வைத்து சூதாடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2020 3:55 AM IST (Updated: 29 Dec 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர், 1-வது தெருவில் வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அதில் அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இது தொடர்பாக வெங்கடேசன்(வயது 29), பொன்னுசாமி(56) உட்பட 15 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மற்றும் 15 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்ட கிளப் நடத்திய திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அனைவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story