மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 29 Dec 2020 5:48 AM IST (Updated: 29 Dec 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2020-21-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற, பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில்புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச்சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதொழில் புரிபவராயின் சுயதொழில் புரிவதற்கான சான்று) , மார்பளவு புகைப்படம் 2 போன்ற ஆவணங்களுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 04322-223678 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story