வானூர், ஆரோவில், கிளியனூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது 55 பவுன் நகைகள் பறிமுதல்
வானூர், ஆரோவில், கிளியனூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்னபட்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றனர்.
அடுத்த சில நாட்களில் ஆரோபுட் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், எறையானூர் பகுதியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், ஆரோவில் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி.பி. நகரை சேர்ந்த அனிசோமன் என்பவரின் வீட்டில் 2 பவுன் நகைகள் என வானூர், ஆரோவில், கிளியனூர் போலீஸ் சரக பகுதிகளில் அடுத்தடுத்து 7 வீடுகளில் சுமார் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரே கும்பல் கைவரிசை
இந்த துணிகர சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் மேற்பார்வையில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்களை தனிப்படை போலீசார் சேகரித்து விசாரித்தனர். இதில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பது தெரியவந்தது. கொள்ளை நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவங்களில் 2 பேர் ஈடுபட்டதும், அவர்கள் பற்றிய விவரமும் தெரிந்தது.
2 பேர் கைது
தொடர்ந்து விசாரித்ததில் அவர்கள் புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 47), வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் ஆறுமுகம் என்கிற கார்த்திக் (55) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மைசூரில் பதுங்கியிருந்த அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து 55 பவுன் நகைகளை கைப்பற்றினர்.
ரவிக்குமார், ஆறுமுகம் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 1½ மாதத்தில் வானூர் பகுதியில் 7 இடங்களில் அடுத்தடுத்து நகைகள் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரித்ததில் கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா மற்றும் வேலூர், விழுப்புரம் பகுதியிலும் இவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
பாராட்டு
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், விஜயகுமார், போலீசார் சேனாதிபதி, திருமால், முருகையா, அருணன், மணிகண்டன், ராஜசேகரன், சிவசக்திமைந்தன், செல்வகுமார், வினோத்குமார் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் ஆகியோர் பாராட்டினர்.

Related Tags :
Next Story