நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை
x
தினத்தந்தி 29 Dec 2020 9:55 AM IST (Updated: 29 Dec 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்குகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா, கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் உள்ள நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்குகிறார்.

விழாவில் நான்(கலெக்டர்), தொடக்கக் கல்வி இயக்கக இயக்குனர் எம்.பழனிசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் அலுவலர்கள் செய்து உள்ளனர்.

Next Story