முத்துப்பேட்டையில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்


முத்துப்பேட்டையில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 29 Dec 2020 10:02 AM IST (Updated: 29 Dec 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு புதிய பஸ் நிலையத்தில் மாநில செயலாளர் அருண் சிதம்பரம், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் உள்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திறந்த வேனில் நின்றவாறு புதிய பஸ் நிலையத்தில பிரசாரம் செய்தனர். அப்போது பேசும் போது கூறியதாவது:-

வரவேற்பும்- உறவுகளும்...

தமிழகம் முழுவதும் பிரசார பயணமாக மக்களை சந்தித்து வருகிறேன். இதனால் எனக்கு வரவேற்பும், உறவுகளும் கிடைத்து வருகிறது. நான் மக்கள் கூட்டத்திற்கு நடுவே செல்லவில்லை. எனது குடும்பத்துக்கு நடுவே நின்று பேசுகிறேன்.

5 வயதில் நடிக்க வந்த நான் இனி நட்சத்திரமில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சிறு விளக்கு நான். என்னை விளக்கு போல நீங்கள் காத்திட வேண்டும் என்றார்.

Next Story