வெள்ளிச்சந்தை அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வெள்ளிச்சந்தை அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Dec 2020 11:06 AM IST (Updated: 29 Dec 2020 11:06 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அய்யப்பாதாஸ் (வயது 28),பெயிண்டர். இவருக்கும் குளச்சல் அருகே பத்தறையை சேர்ந்த சந்திரன் மகள் பிரியா (24) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து பிரியாவின் தாயார் ருக்குமணி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரியாவின் கணவர் அய்யப்பதாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story