ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 65 பேர் கைது
ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்ததை தொடர்ந்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருமாநல்லூர்,
கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில்,மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் 2020 மற்றும் 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சென்னை கவர்னர் மாளிகை முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னை செல்வதற்கு முன்னதாக, பெருமாநல்லூர் நால்ரோடு அருகே, மின்சார போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்ததை தொடர்ந்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கட்சி சார்பற்றவிவசாயிகள் கைது செய்யப்படுவதை கண்டித்து கைதானவர்கள் அனைவரும்உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏர்முனை இளைஞர் அணி மாநில தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் டாக்டர். தங்கராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாவட்ட தலைவர்கள் ஈஸ்வரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story