தொப்பூர் கணவாயில் கார்கள் மீது லாரி மோதல்; 7 பேர் காயம் - போக்குவரத்து பாதிப்பு
தொப்பூர் கணவாயில் 3 கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி,
மராட்டிய மாநிலத்தில் இருந்து தவிடு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோட்டுக்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாயில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
பின்னர் லாரி சாலையோர மலையில் மோதி நின்றது. இந்த விபத்தில் கார்களில் வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோன்ஸ் (வயது 40), மரியா (33), சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (45), ராமச்சந்திரன் (75), சுபாஷினி (35), பெங்களூரு பகுதியை சேர்ந்த சையன் மோகன்தாஸ் (40), சங்கீதா (37) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 7 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் கார்கள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story