திருக்கோவிலூர் அருகே, டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. போராட்டம்


திருக்கோவிலூர் அருகே, டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. போராட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2020 8:04 PM IST (Updated: 29 Dec 2020 8:04 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே தகடி கிராமத்தில் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைகேட்ட வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்்.ஏ. இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து சென்றார்.

இந்த நிலையில் நேற்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தகடி கிராமத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் பொதுமக்கள் சுமார் 700 பேருடன் சேர்ந்து அங்குள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது பற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, தாசில்தார் சிவசங்கரன், விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தம் கார்்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுவசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன்் என்று கூறியதோடு, கடை முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அதிகாரிகள், மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் கிரண் குராலா உத்தரவின் பேரில் தகடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள சாலை பிரச்சினை தீர்க்கப்படும் என்று பொதுமக்களிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தகடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக எம்.எல்.ஏ,க்கு ெபாதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்

Next Story