ராஜபாளையத்தில் தேர்தல் பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு - நடிகை கவுதமி பேச்சு
“ராஜபாளையத்தில் தேர்தல் பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு” என நடிகை கவுதமி பேசினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு, பா.ஜ.க. பொறுப்பாளராக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை கவுதமி நியமிக்கப்பட்டுள்ளாார். இதையடுத்து அவரது அறிமுக கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.
சொக்கர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜாராம், மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் பார்வையாளர் ஞானபண்டிதன் பேசினார்.
கூட்டத்தில் கவுதமி பேசியதாவது:-
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக எனது பணியை நிறைவேற்ற வந்துள்ளேன். தேர்தலுக்கான பணி ஏற்கனவே தொடங்கி வேகமெடுத்து வருகிறது.
பழமை வாய்ந்த, பாரம்பரியமிக்க ராஜபாளையத்தில் தேர்தல் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதி, மகிழ்ச்சி அடைகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் குமாரசாமி ராஜா போன்ற அரசியல் தலைவர்கள் வாழ்ந்த பூமி இது.. இந்த பூமியில் நான் எனது பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ராஜபாளையம் பார்வையாளர்கள் ஸ்ரீகாந்த், சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணன், ரெங்கசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கோதண்டராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story