மராட்டியத்தில் சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு; குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை
சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. இதில் குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை.
சுற்றுலா
மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கின் தளர்வாக சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனுமதி இல்லை
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சுற்றுலா செல்ல அனுமதி இல்லை. சுற்றுலா தலங்களில் வெவ்வேறு குழுவினர் தங்களுக்கு இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே சுற்றுலா தலங்களில் அனுமதிக்கப்பட வேண்டும். லேசான அறிகுறி இருந்தால் கூட அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தங்குமிடங்களில் அங்குள்ள ஊழியர்கள் அவசியம் இன்றி விருந்தினர் அறைகளுக்குள் நுழையக்கூடாது. சுற்றுலா பயணிகள் தங்களது மொபைல் போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story