கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று காலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக கோவில் மண்டபத்தில் அலங்காரவல்லி சவுந்தரநாயகி உடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினர். இதில் விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பசுபதீஸ்வரருக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.

திருக்கல்யாணம்

இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது அப்போது அங்கிருந்த பக்தர்கள் பூக்களை தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் சாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும், ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

Next Story