லாலாபேட்டை அருகே, புதிய குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
லாலாபேட்டை அருகே புதிய குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலாபேட்டை,
லாலாபேட்டையை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு மகாதானபுரம் பிரிவு ரோட்டில் இருந்து தொட்டியபட்டி கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ரூ.ஒரு கோடியே 60 லட்சம் செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நேற்று காலை எந்திரம் மூலம் பணி தொடங்கியது.
இதை அறிந்த குப்பு ரெட்டிபட்டி, ஓமாந்தூர், புதுப்பட்டி.ஆகிய கிராம பொது மக்கள் ஒன்று சேர்ந்து எங்கள் பகுதிக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இங்கு இருந்து தண்ணீர் கொண்டுசென்றால், எங்கள் பகுதியில் மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஆகவே இந்த பணியை நிறுத்த வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தோண்டப்பட்ட பள்ளத்தை மூடினர். அதன்பின் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story