வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்


வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2020 6:52 AM IST (Updated: 30 Dec 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி புதுவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்தன.

புதுச்சேரி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகம், புதுவையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தர்ணாவுக்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தமீம் கனி தொடக்க உரையாற்றினார்.

தர்ணாவில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முகமது பரக்கத்துல்லாஹ், வர்த்தக அணி மாவட்ட தலைவர் நஜீர் அகமது, தொகுதி நிர்வாகிகள் ஹனிபா, ‌ஷாஜகான், இக்பால் பா‌ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் ஜிகினி முகமது தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story