இருசக்கர வாகன ஷோரூமில் தீ தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு மூச்சு திணறல்
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஷோரூமில் தீப்பிடித்ததையடுத்து தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே தனியாருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருசக்கர வாகன ஷோரூம், 2-ம் தளத்தில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பொதுத்தேர்வு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இருசக்கர வாகன ஷோரூம் பின்புறம் உள்ள குடோனில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.
மூச்சு திணறல்
இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பற்றி எரியத்தொடங்கியது. அப்போது எழுந்த கரும்புகை 1,2-வது மாடிக்கு பரவியது. இதனால் தனியார் கல்வி நிறுவனத்தில் பயிற்சிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனே மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் தீ, தீ என கூச்சலிட்டனர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மாணவர்கள் மீட்பு
உடனே சம்பவ இடத்திற்கு புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களும், கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையில் ஒரு வாகனமும் விரைந்து வந்தன. அதில் இருந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். அதன்பின்னர் மாடியில் இருந்த மாணவ-மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்திரா சதுக்கத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Tags :
Next Story