தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி கலெக்டர் தலைமையில் நடந்தது
தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் சமீரன் தலைமையில் நேற்று நடந்தது.
தென்காசி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசார பயணங்களில் ஈடுபட தொடங்கி விட்டனர். தேர்தலுக்கு தேவையான வாக்கு பதிவு எந்திரங்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு தேவையான 3,260 வாக்குப்பதிவு எந்திரம், 2,490 கட்டுப்பாட்டு எந்திரம், 2,680 வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரம் ஆகியவைகள் பலத்த பாதுகாப்புடன் மராட்டிய மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
சரி பார்க்கும் பணி
இந்த நிலையில் நேற்று மின்னணு வாக்கு எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்கி சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இந்த எந்திரங்களை எவ்வாறு இயக்குவது என்பது பற்றியும், அவ்வாறு இயக்கும் போது வாக்குகள் எப்படி பதிவாகும் என்பது பற்றியும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எந்த கட்சிக்கு விழுந்தது என்பதை தெரிந்து கொள்வது பற்றியும் பெல் நிறுவன என்ஜினீயர்கள் விளக்கிக் கூறினார்கள்.

Related Tags :
Next Story