வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில், இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில், இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடி உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும,் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலு, இளைஞர் பெருமன்ற தேசியக்குழு உறுப்பினர் முருகேசு, மாவட்ட செயலாளர் அருள் ராஜன், ஒன்றிய செயலாளர் சரவணன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் பாரதி செல்வன் உள்பட நூற்றுக்கணக்கான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
உருவபொம்மை எரிப்பு
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் இருந்து உருவபொம்மையை பறித்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக திருத்துறைப்பூண்டி ெரயில்வே கேட்டில் இருந்து ஊர்வலமாக புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

Related Tags :
Next Story