9 மாதங்களுக்கு பிறகு குமரியில் 75 டாஸ்மாக் ‘பார்’கள் திறப்பு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மது பிரியர்களுக்கு அனுமதி
9 மாதங்களுக்குப்பிறகு குமரி மாவட்டத்தில் 75 டாஸ்மாக் பார்கள் நேற்று திறக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மது பிரியர்கள் பார்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 75 மதுபானக் கடைகளுடன், பார்கள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் மதுபான பார்கள் மற்றும் கடைகளும் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படவில்லை.
இந்தநிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன. அதே போல் குமரி மாவட்டத்திலும் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் பார்களுக்குள் மது பிரியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரவு
பார்களுக்கு வருபவர்களும், அங்கு பணியாற்றுபவர்களும் முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், கைகளை சுத்தம் செய்யும் திரவங்கள் வைத்து இருக்க வேண்டும். பார்களுக்குள் வருபவர்களை முதலில் வெப்பமானி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க வேண்டும். பார்களில் பணியாற்றக்கூடியவர்கள் 55 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
ஒரு பாரில் 50 சதவீத இருக்கைகள் போடப்பட்டு இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் வந்து சென்றதும் அவர் அமர்ந்து மது அருந்திய இருக்கை மற்றும் மேஜையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு கடைக்காரரும் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் பார் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.
வெப்ப பரிசோதனை
அதன்படி நேற்று திறக்கப்பட்ட நாகர்கோவில் நகரில் உள்ள சில மதுபான பார்களில் வெப்ப பரிசோதனை செய்வதற்காக பலர் வரிசையில் நின்று இருந்ததை காண முடிந்தது. பார்களில் மதுபான பிரியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மது அருந்தியதையும் காண முடிந்தது. பார்களில் வெளிப்பகுதிகளிலும், உள்ளேயும் கிருமி நாசினிகள், சோப்பு- தண்ணீர் போன்றவை வைக்கப்பட்டு இருந்தது. சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. குமரி மாவட்டத்தில் நேற்று 75 பார்களும் திறக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்கள் திறக்கப்பட்டது குறித்து சில மதுபான பிரியர்கள் கூறும்போது, “பார்கள் திறக்கப்படாததால் ஆங்காங்கே திறந்த வெளிகளில் நின்று மதுபானம் அருந்துவது மிகவும் சங்கடமாக இருந்தது. இந்தநிலையில் பார்கள் திறக்கப்பட்டது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்களில் அமர்ந்து மது அருந்துவதால் செலவு கொஞ்சம் அதிகமாக ஆனாலும், வசதியாக உள்ளது” என்றனர்.

Related Tags :
Next Story