மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம் வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஈரோடு,
வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் காணொலி வழியாக பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள் பேசிய விவரம் வருமாறு:-
கீழ்பவானி பாசன சபை தலைவர் நல்லசாமி:-
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கூடாது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர்மட்டமும், கசிவுநீர் திட்டமும் பாதிக்கப்படும்.
மஞ்சள்
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு:-
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், மரவள்ளி கிழங்குக்கு மிகக்குறைந்த விலை கிடைப்பதால், நீண்ட கால பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மஞ்சளை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு உள்ள தடையை நீக்குவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.
மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் கொள்முதல் செய்யப்படும் என்று வியாபாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்து 200-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே ரூ.6 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல்
காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்:-
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் கொண்டு சென்று விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட வேண்டி உள்ளது. நிலம் இல்லாத வியாபாரிகள் கூட கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று வாங்கி வந்து, நெல் விற்பனை செய்கிறார்கள். இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்டிபாளையம், கருங்கல்பாளையம், ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சென்னியப்பன்:-
சக்தி சர்க்கரை ஆலை சார்பில் கடந்த பருவத்தில் வெட்டிய கரும்புக்கு கூலியாக ரூ.45 கோடி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.17 கோடியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அதற்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எஸ்.பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Related Tags :
Next Story