உலக நன்மை, அமைதி வேண்டி சைக்கிளில் ராமேசுவரம் வந்த வடமாநில குழு
உலக நன்மை, அமைதி வேண்டி சைக்கிளில் வடமாநில குழுவினர் ராமேசுவரம் வந்தனர்.
ராமேசுவரம்,
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியில் இருந்து வடமாநில குழுவினர் 85 பேர் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழி மீது அதிக பற்றாக இருக்கவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி சைக்கிளில் ராமேசுவரம் வந்தனர்.
பெங்களூர், சேலம், மதுரை மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று ராமேசுவரம் வந்த இவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ராமேசுவரம் நகர்ப்பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
பின்னர் ராமேசுவரத்தில் இருந்து தங்கள் சைக்கிள் பயணத்தை தொடங்கி கன்னியாகுமரியில் சென்று தங்களது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக அந்த குழுவினர் தெரிவித்தனர். ஒரு நாள் 150 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி வருவதாகவும் இதுவரை சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சைக்கிள் ஒட்டி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story