வட்டார வளர்ச்சி அதிகாரி தற்கொலை முயற்சி விவகாரம்: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு - உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வட்டார வளர்ச்சி அதிகாரி தற்கொலை முயற்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அவரது உறவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை செந்தமிழ்நகர் சிலம்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 59). இவர் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் ரமேஷ் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள முள்புதரில் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.இதை பார்த்த அவருடைய உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது மனைவி தமிழ்செல்வி தன்னுடைய கணவரை ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 2 உயர் அதிகாரிகள் கொடுத்த தொந்தரவால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் எனவே அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவகங்கை நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேசை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில்நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுகுமார், துணைதலைவர் ராதாகிருஷ்ணன், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தமிழரசன்மற்றும் பல்வேறு சங்கங்களை ேசர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற ரமேஷின் உறவினரான பாலமுருகன் (44) என்பவர் நேற்று காலை வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேசை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவரை சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story