மாவட்டங்களில் இதுவரை 6,888 பேர் கொரோனாவால் பாதிப்பு


மாவட்டங்களில் இதுவரை 6,888 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 4:53 AM IST (Updated: 31 Dec 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 6,888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,256 ஆக உயர்ந்துள்ளது. அதில், ஏற்கனவே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,233 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 331 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

6,888 பேர்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்படி மாவட்டத்தில் இதுவரை 4,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 6,888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story