சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை மது குடிக்க வைத்து கற்பழித்தவர் கைது


சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை மது குடிக்க வைத்து கற்பழித்தவர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 6:28 AM IST (Updated: 31 Dec 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை மது குடிக்க வைத்து கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார்.

புனே, 

புனே கேளேவாடி தாப்கீர்நகர் சவுக் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் வாக். இவருக்கு சமூகவலைத்தளம் மூலமாக ஒரு பெண்ணின் நட்பு ஏற்பட்டது. அடிக்கடி சாட்டிங் செய்து வந்த அவர் சம்பவத்தன்று ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரை நம்பி அங்கு வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்தார்.

இதில் அந்த பெண் போதை தலைக்கேறி தள்ளாடினார். இதையடுத்து அபிஜித் வாக் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் போதை மயக்கத்தில் இருந்த அப்பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனை உணர முடிந்த அப்பெண் தடுத்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அபிஜித் வாக், பெண்ணை அடித்து உதைத்தார். பின்னர் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை கற்பழித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஜித் வாக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story