கீழவாளாடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் 5 பக்க சாதனை பட்டியலை வெளியிட்ட முதல்-அமைச்சர்
கீழவாளாடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் 5 பக்க சாதனை பட்டியலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழவாளாடியில் நேற்று இரவு அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அரசின் 5 பக்கங்கள் கொண்ட சாதனை பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:-
நான் இப்போது காட்டிய 5 பக்க சாதனை பட்டியலில் இந்த அரசு எவ்வளவு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது என்று விளக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மறுப்பு சொல்ல முடியுமா?. ஆனால் ஸ்டாலின் தினமும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு இந்த ஆட்சி மீது குழப்பம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அவருடைய பொய்யான அறிக்கைகள் எடுபடாது. உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
அதேபோல் ஸ்டாலினின் சாயமும் விரைவில் வெளுத்துவிடும். பச்சோந்தி போல் நேரத்துக்கு, நேரம் வேகமாக நிறம் மாறும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களை பற்றி சிந்திப்பார். அவருடைய தந்தை கருணாநிதியும் அப்படிதான். ஸ்டாலினை தொடர்ந்து இப்போது உதயநிதி வந்துவிட்டார். தமிழ்நாடு என்ன? இவர்களுக்கு பட்டா போட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஒன்றிய செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
முன்னதாக மண்ணச்சநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதன்பின்னர், அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பேசினார். அப்போது அரிசி ஆலை அதிபர்கள் முதல்-அமைச்சரிடம், ‘‘தமிழக மக்கள் விரும்பி உண்ணும் அரிசி ரகங்களை தமிழகத்திலேயே சாகுபடி செய்ய வேளாண்மைதுறை செயலாளர் தலைமையில் நிரந்தரக்குழுவை அமைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பிராண்ட் விற்பனை செய்யப்படும் அரிசிக்கு தற்சமயம் ஜி.எஸ்.டி.-ல் விதிக்கப்படும் 5 சதவீத வரியில் இருந்து ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு கீழ் விற்பனை தொகை உள்ள அரிசி ஆலைகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மின்சார வாரியம் விதிக்கும் மாதாந்திர நிலை கட்டணத்தில் இருந்து அரிசி ஆலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மண்ணச்சநல்லூர் அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி நெ.1 டோல்கேட்டில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசினார். கீழவாளாடி பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாந்துரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சமுதாய முக்கியஸ்தர்கள் மற்றும் அ.தி.மு.க. முன்னணியினருடன் கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், அவர் லால்குடி வழியாக சென்று புள்ளம்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
வரவேற்பு
மண்ணச்சநல்லூர் வந்த முதல்-அமைச்சருக்கு பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.ஆதாலி, திருப்பைஞ்சிலி ஊராட்சி தலைவர் பி.தியாகராஜன், அண்ணா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் எம்.மாரியப்பன், திருப்பைஞ்சிலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவரும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான டி.எம்.சோமசுந்தரம், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் எம்.அரவிந்த், அய்யம்பாளையம் ஊராட்சி செயலாளர் கந்தசாமி மற்றும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுபோல் வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் பொன்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், டி.பி.பூனாட்சி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
லால்குடி தொகுதி
இதைத்தொடர்ந்து லால்குடி தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடிக்கு வந்த முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க. லால்குடி ஒன்றிய செயலாளர்கள் அசோகன்(வடக்கு), சூப்பர் நடேசன்(தெற்கு), புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம்(வடக்கு), டி.என்.சிவக்குமார்(தெற்கு), பேரூர் செயலாளர்கள் புள்ளம்பாடி ஜேக்கப்அருள்ராஜ், கல்லக்குடி பிச்சைபிள்ளை, மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, புள்ளம்பாடி ஒன்றிய ெஜயலலிதா பேரவை செயலாளர் அருணகிரி, ஒன்றிய நிர்வாகி முத்தமிழ்செல்வன் உள்பட ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

Related Tags :
Next Story