100 நாள் வேலை கேட்டு மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
100 நாள் வேலை கேட்டு பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் திரளான பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி,
100 நாள் வேலை கேட்டு பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் திரளான பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பக்கிரிசாமி, தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி செயலாளர் பாஸ்கர், மற்றும் நிர்வாகிகள் ஏராளமான பெண்கள்் கலந்துகொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சித்ரா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம் நடத்திய பெண்களிடம் நேரில் வந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்து விளக்கி் கூறினர். அப்போது விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக வேலை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story