வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2020 10:09 AM IST (Updated: 31 Dec 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட அரசை வலியுறுத்தியும் சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டம்

அதன்படி தமிழகம் முழுவதும் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பும், பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இதன் தொடர்ச்சியாக நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், மோகன், ஜெயராஜ், பாரதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகா‌‌ஷ், வன்னியர் சங்க செயலாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கனல்காமராஜ், ரமே‌‌ஷ், குழந்தைவேல், துரை, ஜெய்சங்கர், செந்தில்குமார், மதியழகன், குமரவேல், ராஜே‌‌ஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர்.

செஞ்சி

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் கணல்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அய்யனார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்பழகன், பூங்காவனம், வேலாயுதம், ஒன்றிய செயலாளர்கள் ஆப்செட் முருகன், அசோக்சக்கரவர்த்தி, பூ.ராஜேந்திரன், ர.ராஜேந்திரன், கலைச்செல்வன், முரளிதரன் மாவட்ட நிர்வாகிகள் காளமேகம், ரகோத்தமன், ரமேஷ், முருகன், திருமலைவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி நகர பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வன்னியர் சங்கம் - பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவெண்ணெய்நல்லூர் பா.ம.க. நகர செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை தலைவர் ராயர், ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் முத்து மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் கோபி, சந்தோ‌‌ஷ், சிவராமன், உதயகுமார், வட்டார பொறுப்பாளர் அருணாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆனத்தூர் சத்ரியன், பிரவின்குமார், அஜித்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக்கிடம் மனு கொடுத்தனர்.

மயிலம்

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் நெடி சுப்பிரமணி தலைமை தாங்கினார். ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் பழனியப்பன், பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ், கலியமூர்த்தி, சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஆலோசனைக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினார். முன்னதாக கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து பா.ம.க. வன்னியர் சங்கத்தினர் பேரணியாக வந்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதில் வெங்கடாஜலபதி, செங்கேணி, பாலகிரு‌‌ஷ்ணன், சக்திவேல், சம்பத், ராமலிங்கம், பாண்டியன், செல்வம், ஏழுமலை, சவுந்தர்ராஜ், நந்தகோபால், கிரு‌‌ஷ்ணமூர்த்தி, ஜீவா, தேசிங்கு, செல்வராஜ், ராதாகிரு‌‌ஷ்ணன், அய்யனார் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேல்மலையனூர்

மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோ‌‌ஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரசார குழு துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், சிவலிங்கம், சேட்டு, வசிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் 8 இடங்களில்...

இதேபோல் கண்டமங்கலம், வானூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு முன்னாள் எம்.பி. தன்ராஜ் தலைமையிலும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி தலைமையிலும், கோலியனூரில் மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல் தலைமையிலும், மரக்காணத்தில் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையிலும், முகையூரில் திருக்கோவிலூர் தொகுதி செயலாளர் சரவணக்குமார் தலைமையிலும், ஒலக்கூரில் ஒன்றிய செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமையிலும், வல்லத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையிலும் பா.ம.க. வினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story