திருப்பத்தூரில், கல்லூரி பேராசிரியையை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது
திருப்பத்தூரில் கல்லூரி பேராசிரியையை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அவ்வைநகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் பி.எட். பட்டப்படிப்பு படித்து வருகிறார் இவருடன் 29 வயதான தனியார் கல்லூரி பேராசிரியை நட்பாக பழகி வந்துள்ளார், இந்த நிலையில் ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியையின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.
இதற்கிடையில் பேராசிரியை கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது குனிச்சி அருகே வழியில் நிறுத்தி ராஜேஷ்குமார் மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார், வர மறுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கூச்சலிட்டார். உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து கந்திலி போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியை கொடுத்த புகாரின பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story