காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன் வீசிய 3 பேர் கைது
காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன் வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலாப்பட்டு,
பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் சிலர், வெளியில் உள்ள தங்களின் கூட்டாளிகளிடம் செல்போனில் பேசி தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் சிறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறை வார்டன்கள் நடத்திய சோதனையில் கைதிகள் அறையில் இருந்து செல்போன் சார்ஜர், பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் காலாப்பட்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் கைதிகள் தமிழ், கிருஷ்ணா, நந்தகுமார், சசிகுமார் ஆகிய நான்கு பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் புதுவையை சேர்ந்த மதுபாலன், பரத், விக்கி ஆகிய 3 பேரும் சுனாமி குடியிருப்பில் இருந்து செல்போன் மற்றும் சார்ஜரை சேலையில் சுற்றி சிறைக்குள் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு ெ்சய்து, கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story