ஆசிரியர்-அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்
ஆசிரியர்-அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என திருவாரூரில் நடந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொதுச்செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான ரங்கராஜன், மாவட்ட செயலாளர் ஈவேரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.
நடவடிக்கைகளை கைவிட வேண்டும்
இந்த போராட்டங்களுக்கு பிறகும் ஆசிரியர், அரசு ஊழியர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது மட்டுமல்லாமல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் தீர்வு
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஆசிரியர்-அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், அமிர்தராஜ், ஜெயந்தி மற்றும் வட்டார, நகர செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக திருவாரூர் வட்டார செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story