மேல்மலையனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது
மேல்மலையனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மேல்மலையனூர் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.யும், தெற்கு ஒன்றிய செயலாளருமான செஞ்சி சேவல் ஏழுமலை, முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
நாம் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். சில தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். இந்த இயக்கம் தொடங்கி 50-வது ஆண்டு வரப்போகிறது. இந்த பொன்விழாவில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் நீடித்திட உழைக்க வேண்டும். இந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் தொண்டர்களை வழிநடத்திச் செல்லமுடியும்.
பெண்களுக்கான ஆட்சி
ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். மேல்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் முதல் கீழ்மட்டத்தில் உள்ள மக்கள் வரை இந்த ஆட்சிதான் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் பொதுமக்களுக்கு என்னென்ன தேவையோ அதை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த நல்ல எண்ணத்தை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் முன்னேற்றம் பெற உழைக்கின்ற கட்சி. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அப்படியே இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி அனைத்து பதவிகளிலும் பெண்களை அமர வைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. இதையெல்லாம் பெண்கள் எடுத்துக் கூறி வாக்கு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், மருத்துவ அணி இணை செயலாளர் யோகேஸ்வரன், தகவல் நுட்ப தொழில் பிரிவு இணைச்செயலாளர் சத்யராஜ் சேதுபதி, ஒன்றிய அவைத்தலைவர் துளசி, பூங்காவனம், விவசாய அணி சர்குணம், மாவட்ட பாசறை துணை செயலாளர் அருண்தத்தன், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தி, சுகந்தி, ராமச்சந்திரன், மணி, சுப்பன், வெங்கடேசன், எம்.ஜி.ஆர். அணி மதிவாணன், ராஜேந்திரன், இளைஞரணி செல்வமுரளி, ஜெயலலிதா பேரவை அன்பழகன், பாலாஜி, துணை செயலாளர்கள் பாலமுருகன் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மாணவரணி செயலாளர் காசி பாலாஜி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story